Published : 01 Aug 2022 06:24 PM
Last Updated : 01 Aug 2022 06:24 PM

உலகம் முழுவதும் ‘தி லெஜண்ட்’ ரூ.6 கோடி வசூல்: பட்ஜெட் உடன் ஒப்பிட்டால்?

அருள் சரவணன் நடிப்பில் வெளியான 'தி லெஜண்ட்' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.6 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெடி - ஜெர்ரி இயக்கத்தில் அருள் சரவணன் அறிமுக நடிகராக நடித்துள்ள படம் 'தி லெஜண்ட்'. இந்தப் படம் கடந்த 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஊர்வசி ரவுடேலா, கீதிகா திவாரி, சுமன், விவேக், யோகிபாபு, நாசர், ரோபோ ஷங்கர் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பான் இந்தியா முறையில் உருவான இந்தப் படம் உலகம் முழுவதும் 2500 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும் 600-க்கும் அதிகமான திரைகளில் வெளியானது.

ரூ.45 கோடி செலவில் உருவான 'தி லெஜண்ட்' இதுவரை உலக அளவில் ரூ.6 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. படத்தின் முதல் நாள் வசூல் ரூ.2 கோடியை கடந்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் உடன் ஒப்பிடும்போது, வசூல் மிகவும் குறைவுதான் என்று சினிமா வர்த்தகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x