Published : 18 Jul 2022 03:48 PM
Last Updated : 18 Jul 2022 03:48 PM

3 நாட்களில் ரூ.1.65 கோடி வசூலித்த டாப்ஸியின் ‘சபாஷ் மிது’

டாப்ஸி நடிப்பில் வெளியான 'சபாஷ் மிது' திரைப்படம் கடந்த 3 நாட்களில் ரூ.1.65 கோடி வசூலித்துள்ளது.

இயக்குநர் ஸ்ரீசித் முகர்ஜி இயக்கத்தில் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் 'சபாஷ் மிது'. இதில் மிதாலி ராஜாக டாப்ஸி நடித்திருந்தார்.

தேவதர்ஷினி, விஜய் ராஜ், மும்தாஜ் சார்கர் உள்ளிட்ட பலர் நடிந்த இப்படத்தை வியாகாம் 18 ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்தது. கடந்த ஜூலை 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

'சபாஷ் மிது' வெளியான முதல் நாள் ரூ.40 லட்சத்தை வசூலித்து மந்தமான தொடக்கத்துடனே ஆரம்பித்தது. இரண்டாவது நாள் ரூ.60 - 65 லட்சம் வரை வசூலித்துள்ளது. இரண்டு நாள் முடிவில் ரூ.1 கோடியை படம் வசூலித்தது. மூன்றாவது நாள் ரூ.60 லட்சம் என இதுவரை 1.65 கோடி ரூபாய் மட்டுமே படம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் விமர்சனத்தைப் படிக்க: முதல் பார்வை | சபாஷ் மிது - இந்திய கிரிக்கெட் உலகின் இன்னொரு முகம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x