Published : 26 Jun 2022 03:28 AM
Last Updated : 26 Jun 2022 03:28 AM

புதுப்பொலிவுடன் மீண்டும் ரிலீஸ் ஆகும் `டைட்டானிக்’ - படக்குழு அறிவிப்பு

புகழ்பெற்ற ’டைட்டானிக்’ திரைப்படம் புதுப்பொலிவுடன் மீண்டும் திரைக்கு வருகிறது.

1997ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான படம் ‘டைட்டானிக்’. இப்படம் 1912ஆம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை அடிப்படையாகக் கொண்டு உருவான படம்.

உலகம் முழுவதும் பிரம்மாண்ட வெற்றி பெற்ற இப்படம் 11 ஆஸ்கர் விருதுகளைக் குவித்தது. இப்படத்தில் நடித்த லியார்னாடோ டிகாப்ரியோ மற்றும் கேட் வின்ஸ்லெட் இருவரும் பெரும் புகழை அடைந்தனர். இதுவரை உலகில் அதிகம் வசூல் சாதனைப் படைத்த படங்களில் ’அவெஞ்சர்: எண்ட்கேம்’, ’அவதார்’ இரண்டு படங்கள். இதற்கடுத்த இடத்தை பிடித்திருப்பது 'டைட்டானிக்' திரைப்படம்.

தற்போது இந்தப் படம் புதுப்பொலிவுடன் மீண்டும் திரைக்குவர இருக்கிறது. படம் வெளியாகி 25 வருடங்கள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, இந்த சர்ப்ரைஸ் அறிவிப்பை டைட்டானிக் படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் திரையரங்குகளில் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை வெளியிடவும் முடிவு செய்துள்ளனர். அதன்படி, 2023ல் அதாவது அடுத்தவருடம் காதலர் தினத்தன்று (பிப்ரவரி 14) புதுப்பிக்கப்பட்ட பதிப்பு உலகம் முழுவதும் காதலர்களை சந்திக்கவுள்ளது டைட்டானிக்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x