Published : 18 May 2022 03:35 PM
Last Updated : 18 May 2022 03:35 PM

வசூல் சாதனையில் கேஜிஎஃப் 2

கேஜிஎஃப் 2 திரைப்பஃபம் ரூ.1200.76 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்துள்ள படம் 'கேஜிஎஃப்: சாப்டர் 2’. ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, இந்தி நடிகர் சஞ்சய் தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கடந்த ஏப்.14-ம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. ரிலீஸான நாளில் இருந்தே வசூலை குவித்து வரும் இப்படம், உலகம் முழுவதும் ஆயிரம் கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இப்போது 33 நாளில் ரூ.1200.76 கோடி வசூலித்து இப்படம் மேலும் சாதனை படைத்துள்ளது.

ஆமிர்கானின் ‘தங்கல்’, ராஜமவுலியின் ‘பாகுபலி’ ஆகிய படங்கள் ஏற்கெனவே ரூ.1200 கோடி வசூலை எட்டியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x