Published : 18 May 2022 03:19 PM
Last Updated : 18 May 2022 03:19 PM

பாரம்பரிய உடையில் ராஷ்மிகா : வைரலாகும் புகைப்படம்

கொடவா சமுதாய முறைப்படி பிரபல நடிகை ரஷ்மிகா மந்தனம் தோழிகளுடன் சேலை கட்டி இருந்த புகைப்படம் வெளியாகி உள்ளது.

தெலுங்கு, தமிழ், இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. ’நேஷனல் கிரஷ்’ என்று அழைக்கப்படும் அவரது பூர்வீகம், கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம். ராஷ்மிகாவின் பால்ய தோழி ஒருவருக்கு குடகில் சமீபத்தில் திருமணம் நடந்தது. படங்களில் பிஸியாக இருந்தாலும், தோழியின் திருமணத்தில் கலந்துன்கொண்டார் ராஷ்மிகா. அவர், கொடவா சமுதாய முறைப்படி தோழிகளுடன் சேலை கட்டி இருந்தார்.

தோழிகளுடன் அவர் எடுத்துக்கொண்ட அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராஷ்மிகா தற்போது வம்சி இயக்கத்தில் விஜயின் #Thalapathy65 -ல் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x