Published : 11 May 2022 04:37 PM
Last Updated : 11 May 2022 04:37 PM
நடிகர் சந்தானம் தேசாந்திரியாய் நடிக்கும் 'குலு குலு' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
'மேயாத மான்' 'ஆடை' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிக்கும் திரைப்படம் 'குலு குலு'. இந்த படத்தில் நாயகியாக அதுல்யாசந்திரா நடிக்கிறார். தவிர, நமிதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, 'லொள்ளு சபா' மாறன், சேசு ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது.
இந்த நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஊர், ஊராகச் சுற்றும் தேசாந்திரியாய் சந்தானம் நடித்துள்ளார். போஸ்ட் புரோக்ஷன் பணிகள் நடைந்து வரும் நிலையில், ஜூன் மாதம் படம் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.
Here is the exciting first look of my next #GuluGulu #GuluGuluFirstLook
— Santhanam (@iamsanthanam) May 10, 2022
@MrRathna @circleboxE @Music_Santhosh @KVijayKartik @rajnarayanan_ @SonyMusicSouth @Kirubakaran_AKR @proyuvraaj pic.twitter.com/w4H2HGS4Me
Sign up to receive our newsletter in your inbox every day!