Published : 16 Apr 2016 15:05 pm

Updated : 16 Apr 2016 16:44 pm

 

Published : 16 Apr 2016 03:05 PM
Last Updated : 16 Apr 2016 04:44 PM

யு சான்றிதழுடன் ஏப்.29-ல் வெளியாகிறது மனிதன்

29

உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் 'மனிதன்' படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். படம் ஏப்ரல் 29ம் தேதி வெளியாகிறது.

உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா, விவேக், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மனிதன்'. மதி ஒளிப்பதிவு செய்த இப்படத்தை அஹ்மத் இயக்கினார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி, காரைக்குடி உள்ளிட்ட சில பகுதிகளில் நடைபெற்றது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னை, சாலக்குடி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.

படப்பிடிப்பு பணிகள், இறுதிகட்டப் பணிகள் என அனைத்தும் முடிந்து படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். சென்சார் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஏப்ரல் 29ம் தேதி 'மனிதன்' வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

உதயநிதி ஸ்டாலின்மனிதன்ரிலீஸ்ஏப்ரல் 29சென்சார்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author