Published : 06 Apr 2022 05:54 PM
Last Updated : 06 Apr 2022 05:54 PM

விஜய் ஆண்டனியின் 'கொலை' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

விஜய் ஆண்டனியின் 'கொலை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'கோடியில் ஒருவன்' படத்துக்குப் பிறகு 'தமிழரசன்', 'அக்னிச் சிறகுகள்', 'காக்கி', 'பிச்சைக்காரன் 2', ‘கொலை’ ‘மழை பிடிக்காத மனிதன்’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் ஆண்டனி. இதில் சில படங்களின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

பாலாஜிகுமார் இயக்கி வரும் கொலை படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இன்ஃபினிட்டி பிலிம் பிக்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ், டேபிள் ஃப்ராபிட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்பட்டத்தில் ரித்திகா சிங், ராதிகா சரத்குமார், மீனாட்சி சவுத்ரி, அர்ஜுன் சிதம்பரம், முரளி சர்மா உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியுடன் நடித்துள்ளனர். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கும் இப்படத்துக்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார்.

Image


இதன் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் 21ம் தேதி நிறைவடைந்தது. படத்தின் இறுதிக்கட்ட பணிகளும் முடிந்துள்ள நிலையில், விரைவில் படம் ரீலிஸாக உள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. வித்தியாசமான கதைக்களத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் விஜய் ஆண்டனியின் 'கொலை' படமும் ரசிகர்களுக்கு புதுவித அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x