Published : 10 Feb 2022 06:20 PM
Last Updated : 10 Feb 2022 06:20 PM

ரஜினியை இயக்குகிறார் நெல்சன் - வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு

ரஜினிகாந்தின் அடுத்தப் படம் தொடர்பான தகவல்களை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி, ரஜினியின் புதிய படத்தை நெல்சன் இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

‘அண்ணாத்த’ படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கும் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இதற்காக கே.எஸ்.ரவிகுமார், வெங்கட்பிரபு, விக்னேஷ் சிவன், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி இயக்குநர்கள் கதைகள் கூறியுள்ளனர். ஆனால், ரஜினி தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு இயக்குநரையும் இறுதி செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, சில நாட்கள் முன் ரஜினியின் அடுத்தப் படம் குறித்த தகவல் வெளியானது. தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தின் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளார் என்பதுதான் அந்த தகவல். ‘பீஸ்ட்’ படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. ஏப்ரல் 14-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்த தகவலை தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வீடியோவில் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் மூவரும் ஸ்டைலிஷாக தோன்றுகின்றனர். இந்த வீடியோ ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. இதையடுத்து, #Thalaivar169 என்ற ஹேஷ்டேகுடன் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x