Published : 07 Feb 2022 08:59 PM
Last Updated : 07 Feb 2022 08:59 PM

அரபிக் குத்து: மீண்டும் ரசிகர்களை வசீகரித்த நெல்சனின் ‘பீஸ்ட்’ அப்டேட்

விஜய் ரசிகர்கள் மத்தியில் நெல்சன் கொடுத்துள்ள ‘பீஸ்ட்’ அப்டேட் பெரும் வைரலாகி வருகிறது.

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். ஏப்ரல் 14-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது. இதற்கான விளம்பரப்படுத்தும் பணிகள் எப்போது துவங்கும் என்று விஜய் ரசிகர்கள் பெரும் ஏக்கத்துடன் இருந்தார்கள்.

இதனிடையே இன்று (பிப்ரவரி 7) மாலை 6 மணிக்கு ‘பீஸ்ட்’ அப்டேட் வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது. இதனை விஜய் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருந்தார்கள். இதில் ‘அரபிக் குத்து’ என்ற பாடல் பிப்ரவரி 14-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று வீடியோ ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்கள்.

இந்த வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக அமைந்துள்ளது. சுமார் 2 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வைகளைக் கடந்துவிட்டது. இதில் அனிருத், சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் நெல்சன் மூவரும் இணைந்து பாடல் உருவாக்கம் குறித்து காமெடியாக பேசி உருவாக்கியுள்ளனர். இந்தப் பாடலை சிவகார்த்திகேயன்தான் எழுதியுள்ளார். இதில் விஜய்யும் தொலைபேசி வாயிலாகப் பேசியுள்ளார். முழுக்க காமெடியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ அடுத்த சில நாட்களுக்கு யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை.

இதேபோன்று நெல்சனின் முந்தைய படமான ‘டாக்டர்’படத்தின் பாடல்களுக்கும் உருவாக்கி இருந்தார்கள். அதுவும் இணையத்தில் பெரும் வைரலானது. அதே பாணியை ‘பீஸ்ட்’ படத்துக்கும் பின்பற்றியுள்ளார் நெல்சன். இந்த வீடியோவின் மூலம் விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளார்.

வீடியோ இணைப்பு - https://www.youtube.com/watch?v=-aVdxDDrcTc

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x