Published : 05 Feb 2022 09:35 PM
Last Updated : 05 Feb 2022 09:35 PM

மீண்டும் ‘மருதநாயகம்’... தீவிரம் காட்டத் தொடங்கிய கமல்!

தனது ‘மருதநாயகம்’ படத்தை மீண்டும் தொடங்குவது தொடர்பாக சோனி நிறுவனத்துடன் ஆலோசித்து வருகிறார் கமல்.

கமல் இயக்கி, நடித்து, தயாரிக்க திட்டமிட்ட படம் ‘மருதநாயகம்’. இதன் தொடக்க விழாவை மிக பிரமாண்டமாக நடத்தினார் கமல்ஹாசன். இந்தப் படம் தொடர்பான வீடியோக்கள் இப்போதும் இணையத்தில் பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது. இந்தப் படம் திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. மீண்டும் எப்போது தொடங்கப்படும் என்பதும் தெரியாமலேயே இருக்கிறது. அவ்வப்போது இந்தப் படம் தொடர்பான தகவல்கள் வெளியாகும். ஆனால், அடுத்த கட்டத்துக்கு ‘மருதநாயகம்’ படம் நகரவே இல்லை. இது கமலின் கனவுப்படம் என்பதால், எப்படியாவது இதனை எடுத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருந்து வந்தார் கமல்.

தற்போது கமலுடன் சோனி நிறுவனம் கைகோத்துள்ளது. ராஜ்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தை சோனி மற்றும் ராஜ்கமல் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது. இதன் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

தனது கனவுப்படமான ‘மருதநாயகம்’ படத்தின் பட்ஜெட், கதைக்களம் கொண்ட தொகுப்பினை சோனி நிறுவனத்திடம் அளித்துள்ளார் கமல்ஹாசன். அந்நிறுவனம் இது தொடர்பான ஆலோசனையில் இறங்கியுள்ளது. சோனி நிறுவனம் பச்சைக்கொடி காட்டிவிட்டால் ‘மருதநாயகம்’ படத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x