Published : 28 Jan 2022 11:40 AM
Last Updated : 28 Jan 2022 11:40 AM

யூடியூபில் சாதனை படைத்த ‘பொல்லாத உலகம்’ பாடல்

தனுஷ் நடித்துள்ள மாறன் படத்தின் ‘பொல்லாத உலகம்’ பாடல் யூடியூபில் சாதனை படைத்துள்ளது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாறன்'. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘பொல்லாத உலகம்’ என்ற பாடலை படக்குழு சமீபத்தில் யூடியூப் தளத்தில் வெளியிட்டது. விவேக் எழுதியுள்ள இப்பாடலை தனுஷ் மற்றும் அறிவு இணைந்து பாடியுள்ளனர்.

இந்நிலையில் இப்பாடல் வெளியான 24 மணி நேரத்தில் 40 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியாக கோலிவுட் படங்களின் வீடியோ பாடல்களில் இதுவே 24 மணி நேரத்தில அதிக பார்வைகளை பெற்ற பாடலாக கருதப்படுகிறது. இதுவரை இப்பாடல் 64 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. மேலும் 1 லட்சத்துக்கு 17 ஆயிரம் லைக்குகளை இப்பாடல் பெற்றுள்ளது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x