Published : 28 Mar 2016 08:57 AM
Last Updated : 28 Mar 2016 08:57 AM

தயாரிப்பாளர்களுக்கு நிலம் வழங்க இளையராஜா இசை நிகழ்ச்சி: தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் எஸ்.தாணு தகவல்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தின் 2016-ம் ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, செயலாளர்கள் டி.சிவா, ஆர்.ராதா கிருஷ்ணன், துணைத் தலைவர்கள் பி.எல்.தேனப்பன், எஸ்.கதிரேசன், பொருளாளர் சத்யஜோதி தியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் ஏராளமான தயாரிப் பாளர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், சங்கத்தின் வரவு செலவு கணக்கு சமர்பிக்கப்பட்டது. மேலும் சில தீர்மானங்களை செயலாளர் ராதாகிருஷ்ணன் வாசித்து அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டத்தில் சங்கத் தலைவர் எஸ்.தாணு பேசிய தாவது:

சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களைக் காப்பாற்ற வேண்டும் என்றுதான் பதவி யேற்றது முதல் உழைத்து வருகிறோம். க்யூப் நிறுவனங்களுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து, பேச்சுவார்த்தை நடத்தியதில் நல்ல முடிவு எட்டப்பட்டுள்ளது. 100 திரை யரங்குகளுக்கு குறைவாக வெளி யாகும் படங்களுக்கு ரூ.1,400 குறைப்ப தாக தெரிவித்துள்ளனர். இதை மேலும் குறைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருட்டு விசிடியை ஒழிக்க குழு அமைப்பது குறித்து நடிகர் சங்கம், பெப்ஸி அமைப்பின் ஒத்துழைப்பை கோரியிருக்கிறோம். இதற்காக தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சுரேஷ் காமாட்சி, மன்சூர் அலிகான், பெப்ஸி விஜயன் தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக் கப்பட்டு விட்டதால், தயாரிப்பாளர்களுக்கான மானியம் குறித்து அரசிடம் பேச முடியாது. விரைவில் மானியம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். பண்டிகை காலங்களில் மட்டுமே பெரிய பட்ஜெட் படங்கள் வெளியீடு என்பது குறித்து தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்ய முடியாது. இப்பிரச்சினை குறித்து சினிமா கூட்டமைப்பில் பேசப்படும்.

தயாரிப்பாளர்களுக்கு நிலம் வழங்குவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம். அதற்கான நிலங்கள் வாங்க இடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதற்காக இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒளிபரப்பு உரிமையை வாங்க முன்னணி தொலைக்காட்சி நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்த தொகையைக் கொண்டு இடம் வாங்கப்படும்.

சங்கத்தில் தற்போது 1,150 நிரந்த உறுப்பினர்கள் உள்ளனர். யாரேனும் விருப்ப ஓய்வு பெற விரும்பினால், அவர்களுக்கு விருப்ப ஓய்வுத்தொகை வழங்கப்படும். தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக இருப்பது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x