Published : 25 Dec 2021 10:54 AM
Last Updated : 25 Dec 2021 10:54 AM

விஜய் சேதுபதி- கேத்ரீனா நடிப்பில் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படப்பிடிப்பு தொடக்கம்

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கேத்ரீனா கைஃப் நடிக்கும் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அந்தாதூன்'. 2018-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், 3 தேசிய விருதுகளையும் தட்டிச் சென்றது. இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரீமேக்கும் செய்யப்பட்டு வருகிறது.

ஸ்ரீராம் ராகவனின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு நாயகியாக கேத்ரீனா நடிக்கிறார். இப்படத்துக்கு ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் அப்போது கேத்ரீனா கைஃபுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு தள்ளிப் போனது.

இந்நிலையில் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தின் படப்பிடிப்புப் பணிகள் இன்று (டிச.25) தொடங்கப்பட்டுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x