Published : 10 Dec 2021 11:48 AM
Last Updated : 10 Dec 2021 11:48 AM

யூடியூபில் சாதனை படைத்த ‘ஆர்ஆர்ஆர்’ ட்ரெய்லர்  

ராஜமெளலி இயக்கியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ட்ரெய்லர் யூடியூப் தளத்தில் சாதனை படைத்துள்ளது.

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் வரும் ஜனவரி 7 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதற்கான விளம்பரப் பணிகள் முழு மூச்சில் நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று (09.12.21) யூடியூப் தளத்தில் நேற்று வெளியானது. நேற்று முழுக்கவே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உலக அளவில் ‘ஆர்ஆர்ஆர்’ படம் தொடர்பான ஹேஷ்டேகுகள் இடம் பிடித்தன. நேற்று வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ஒரே நாளில் 2 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 1.2 கோடிக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்று 24 மணி நேரத்தில் அதிக லைக்குகளைப் பெற்ற இரண்டாவது படம் என்ற சாதனையை ‘ஆர்ஆர்ஆர்’ ட்ரெய்லர் பெற்றுள்ளது.

முதல் இடத்தில் விஜய் நடித்த ‘பிகில்’ ட்ரெய்லர் இருந்துவருகிறது. இந்தப் பட்டியலில் ‘விஸ்வாசம்’ ட்ரெய்லர் மூன்றாவது இடத்திலும், நான்காவது இடத்தில் ‘வக்கீல் சாப்’ ட்ரெய்லரும் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x