Last Updated : 09 Mar, 2016 04:29 PM

 

Published : 09 Mar 2016 04:29 PM
Last Updated : 09 Mar 2016 04:29 PM

’தெறி அப்டேட்ஸ்: 7 பாடல்களும் பின்னணி தகவலும்

விஜய் நடிப்பில் உருவாகும் 'தெறி' படத்தில் 7 பாடல்கள் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கும் 'தெறி' படத்தின் இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தாணு தயாரித்து வருகிறார்.

விஜய்க்கு மனைவியாக சமந்தாவும், தோழியாக ஏமி ஜாக்சனும் நடித்திருக்கிறார்கள். விஜய்யின் மகளாக நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்திருக்கிறார். வில்லனாக மகேந்திரன் நடித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டை மார்ச் 20ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த தாணு திட்டமிட்டு இருக்கிறார். ஏப்ரல் 14ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ஒரு ராப் பாடலும் அடங்கும். படத்தின் டீஸரில் இடம்பெற்றுள்ள இசை, ராப் பாடலின் ஒரு சின்ன பகுதி என்றும் தெரிவித்தார்கள். டி.ராஜேந்தர் பாடியிருக்கும் ஒரு குத்துப்பாடலை இப்படத்திற்காக சமீபத்தில் தான் ஒலிப்பதிவு செய்தார்கள். இப்படத்தின் மொத்த பாடல்கள் பணிகளையும் முடித்து தயாராக வைத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

மேலும், இப்படத்தின் இசையை புதிய நிறுவனம் ஒன்று வெளியிட ஆர்வம் காட்டி வருவதாகவும், இதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்தார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x