Published : 20 Nov 2021 03:21 PM
Last Updated : 20 Nov 2021 03:21 PM

‘பீஸ்ட்’, ‘கே.ஜி.எஃப் 2’ படங்களுக்குப் போட்டியாகக் களமிறங்கும் 'லால் சிங் சட்டா’

ஆமிர் கான் நடிக்கும் 'லால் சிங் சட்டா’ படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டாம் ஹாங்ஸ் நடிப்பில், ராபர்ட் ஸெமிக்ஸ் இயக்கத்தில் 1994-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump). 1986-ல் வின்ஸ்டன் க்ரூம் எழுதிய நாவலின் அடிப்படையில் உருவான படம் இது. ஹாலிவுட்டில் வெளியான மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்று எனப் பெயர் பெற்று, உலக அளவில் எண்ணற்ற ரசிகர்களைக் கொண்டது.

5 ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்தப் படத்தின் அதிகாரபூர்வ இந்தி ரீமேக்கில் ஆமிர் கான் நடித்து வருகிறார். அட்வைத் சந்தன் இயக்கி வரும் இந்தப் படத்துக்கு 'லால் சிங் சட்டா’ எனப் பெயரிட்டுள்ளது படக்குழு. இதில் நாயகியாக கரீனா கபூர் நடித்துள்ளார். இப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்தார். பின்னர் அப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகவே, அந்தக் கதாபாத்திரத்தில் தற்போது நாக சைதன்யா நடிக்கிறார்.

இப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கெனவே இதே தேதியில் ‘கே.ஜி.எஃப் 2’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது 'லால் சிங் சட்டா’ படமும் இந்தப் போட்டியில் இணைந்துள்ளது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x