Published : 17 Nov 2021 02:52 PM
Last Updated : 17 Nov 2021 02:52 PM

அமெரிக்காவில் 150க்கும் அதிகமான இடங்களில் வெளியாகும் ‘மாநாடு’

சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள 'மாநாடு' திரைப்படம் அமெரிக்காவில் 150க்கும் அதிகமான இடங்களில் வெளியாகவுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாநாடு'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தீபாவளிக்கு வெளியாகவிருந்த இந்தப் படம் தற்போது நவம்பர் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் அமெரிக்க விநியோக உரிமையை கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‘மாநாடு’ திரைப்படம் அமெரிக்காவில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வெளியாகவுள்ளது.

இந்நிறுவனம் ‘பாகுபலி 2' உள்ளிட்ட பல்வேறு இந்தியத் திரைப்படங்களை அமெரிக்காவில் வெளியிட்டுள்ளது. தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் அமெரிக்க விநியோக உரிமையையும் இந்நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x