Published : 21 Oct 2021 12:37 pm

Updated : 21 Oct 2021 12:38 pm

 

Published : 21 Oct 2021 12:37 PM
Last Updated : 21 Oct 2021 12:38 PM

இணையத்தில் லீக் ஆன படப்பிடிப்பு காட்சிகள்- அதிர்ச்சியில் ‘சலார்’ படக்குழு

leaked-salaar-video-triggers-negative-reaction-among-fans

'கே.ஜி.எஃப்' படங்களைத் தொடர்ந்து, பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'சலார்'. 'கே.ஜி.எஃப்' படங்களைத் தயாரித்த ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது. பிரபாஸ் நாயகனாக நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் நாயகியாக ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் பிரபாஸ் துப்பாக்கி ஏந்திய படி எதிரிகளை காட்சி இடம்பெற்றுள்ளது. வெறும் பத்து நொடிகளே ஓடக் கூடிய இந்த வீடியோவை படப்பிடிப்புத் தளத்தில் இருந்த ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்து இணையத்தில் லீக் செய்துவிட்டார்.

‘சலார்’ படம் குறித்த தகவல்களையோ, படப்பிடிப்பு தொடர்பாக தகவல்களையோ பெரியளவில் வெளியிடாமல் ரகசியம் காத்து வந்த படக்குழுவுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபாஸ் ரசிகர்கள் பலரும் அந்த வீடியோவை வெளியிட்டவரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று படக்குழுவுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


தவறவிடாதீர்!


Salaarசலார்PrabhasPrashanth Neelகே.ஜி.எஃப்பிரசாந்த் நீல்ஹொம்பாளே பிலிம்ஸ்பிரபாஸ்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x