Published : 03 Mar 2016 03:38 PM
Last Updated : 03 Mar 2016 03:38 PM
'வாலு' இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் மீண்டும் சிம்பு நடிக்க திட்டமிட்டு இருக்கிறார்.
சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'வாலு'. தமன் இசையமைத்த இப்படத்தை விஜய் சந்தர் இயக்கி இருந்தார். நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் பல்வேறு பிரச்சினைகளை கடந்து வெளியானது. ரசிகர்கள் மத்தியில் இப்படத்துக்கு வரவேற்பு கிடைத்தது.
'வாலு' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் விஜய் சந்தர். தற்போது தனது அடுத்த படத்திலும் சிம்புவை இயக்க திட்டமிட்டு இருக்கிறார். இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
முழுக்க கமர்ஷியல் பாணியில் உருவாக இருக்கும் இப்படத்தில் சிம்பு உடன் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தான உடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT