Published : 19 Sep 2021 19:30 pm

Updated : 19 Sep 2021 20:39 pm

 

Published : 19 Sep 2021 07:30 PM
Last Updated : 19 Sep 2021 08:39 PM

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் யோகி பாபு

yogibabu-in-badhaai-ho-remake

கோயம்புத்தூர்

ஆர்.ஜே.பாலாஜி - என்.ஜே.சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவுரவக் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார்.

அமித் ரவீந்திரநாத் ஷர்மா இயக்கத்தில் வெளியான பாலிவுட் படம் ‘பதாய் ஹோ’. இந்தப் படத்துக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பால், இதன் தென்னிந்திய மொழி ரீமேக் உரிமைகளைக் கைப்பற்றினார் போனி கபூர். இதில் முதலில் தமிழ் ரீமேக் தொடங்கப்பட்டுள்ளது.

'மூக்குத்தி அம்மன்' படத்தை இயக்கிய ஆர்.ஜே.பாலாஜி - என்.ஜே.சரவணன் கூட்டணி ரீமேக் செய்து வருகிறது. இதில் நாயகனாக ஆர்.ஜே.பாலாஜி, நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்து வருகிறார்கள். மேலும், சத்யராஜ், ஊர்வசி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

தற்போது இந்தப் படத்தில் கவுரவக் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். இதனைத் தனது ட்விட்டர் பதிவில், "ஆர்.கே.பாலாஜி படத்தில் கவுரவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்" என்று புகைப்படத்துடன் ட்வீட் செய்துள்ளார் யோகி பாபு. இந்தப் படத்துக்கு 'வீட்ல விசேஷங்க' எனத் தலைப்பிட்டுள்ளனர்.

கோயம்புத்தூரில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முழுப் படப்பிடிப்பையும் அங்கேயே முடித்துவிட்டு சென்னை திரும்பப் படக்குழு திட்டமிட்டுள்ளது.


தவறவிடாதீர்!


ஆர்.ஜே.பாலாஜியோகி பாபுஎன்.ஜே.சரவணன்வீட்ல விசேஷங்கபதாய் ஹோ ரீமேக்சத்யராஜ்ஊர்வசிஅபர்ணா பாலமுரளிOne minute newsRjbalajiYogi babuNjsaravananBadhaai hao remakeSathyarajUrvashiAparna balamurali

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x