Published : 09 Sep 2021 04:37 PM
Last Updated : 09 Sep 2021 04:37 PM

'தளபதி 66' படப்பிடிப்பு திட்டங்கள்

சென்னை

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு திட்டங்கள் என்னவென்று தகவல் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'பீஸ்ட்'. நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

'பீஸ்ட்' படத்தை முடித்துவிட்டு, தில் ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். இது விஜய் நடிப்பில் உருவாகும் 66-வது படமாகும். ஆகையால் இதனை 'தளபதி 66' என்று அழைத்து வருகிறார்கள்.

இந்தப் படத்தின் பூஜையை மட்டும் ஆயுத பூஜை சமயத்தில் நடத்த தில் ராஜு திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் 'ஆர்சி15' படத்தின் பூஜையை ஹைதராபாத்தில் வெகு விமரிசையாக நடத்தினார். அதே போல் 'தளபதி 66' படத்தின் பூஜையையும் பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளார்.

மேலும், 'தளபதி 66' படத்தின் படப்பிடிப்பு உடனடியாக தொடங்கப் போவதில்லை. இப்போதைக்குப் பூஜையை மட்டும் நடத்தி முதற்கட்டப் பணிகளைத் தொடங்கவுள்ளார்கள். 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் தான் தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். அப்போது படப்பிடிப்பு தொடங்கி, தீபாவளிக்குப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x