Published : 27 Aug 2021 11:13 AM
Last Updated : 27 Aug 2021 11:13 AM

'வெந்து தணிந்தது காடு' புதிய போஸ்டர் வெளியீடு

சென்னை

சிலம்பரசன் நடித்து வரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் படம் 'வெந்து தணிந்தது காடு'. வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்குக் கலை இயக்குநராக ராஜீவன், பாடலாசிரியராக தாமரை, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு திருச்செந்தூரில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிலம்பரசன் தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பேசி முடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 2-ம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது 'வெந்து தணிந்தது காடு' படத்தின் புதிய போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இது சிம்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதில் சிலம்பரசன - நாயகி கயடு லோஹர் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்க கெளதம் மேனன் திட்டமிட்டுள்ளார். மேலும், படப்பிடிப்பில் யாரும் புகைப்படங்கள் எடுக்காத வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளைப் படக்குழு எடுத்துள்ளது.

இந்தப் படத்தில் சிலம்பரசனுக்கு அம்மாவாக ராதிகா நடித்து வருகிறார். சென்னை படப்பிடிப்பை முடித்துவிட்டு, புதுச்சேரியில் சில முக்கிய காட்சிகளைப் படமாக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x