Published : 08 Aug 2021 11:10 AM
Last Updated : 08 Aug 2021 11:10 AM

'பீஸ்ட்' அப்டேட்: விஜய்யுடன் நடிக்கும் நடிகர்கள் பட்டியல் வெளியீடு

விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தில் நடிக்கும் நடிகர்கள் பட்டியலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

ஜார்ஜியாவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. பின்னர் சென்னையில் 2-வது கட்டப் படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் பாடல் ஒன்றும், சில காட்சிகளும் படமாக்கப்பட்டன. தற்போது சென்னையிலேயே 3-வது கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் விஜய், பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள்.

விஜய், பூஜா ஹெக்டே தவிர்த்து இதில் யாரெல்லாம் விஜய்யுடன் நடிக்கிறார்கள் என்பதைப் படக்குழு அறிவிக்காமலேயே இருந்தது. இந்த சூழலில் நேற்று (ஆகஸ்ட் 08) ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்யுடன் செல்வராகவன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது. செல்வராகவனைத் தொடர்ந்து யோகி பாபு, விடிவி கணேஷ், லிலிபுட் ஃபரூக்கி, ஷைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், அன்குர் அஜித் விகால் ஆகியோரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடிக்கவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x