Last Updated : 03 Feb, 2016 12:02 PM

 

Published : 03 Feb 2016 12:02 PM
Last Updated : 03 Feb 2016 12:02 PM

முதல் முறையாக வேறு தயாரிப்பில் நடிக்கிறார் உதயநிதி

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். அப்படத்தைத் தொடர்ந்து 'இது கதிர்வேலன் காதல்', 'நண்பேன்டா' மற்றும் 'கெத்து' ஆகிய படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார்.

தற்போது அவரது நடிப்பில் 'மனிதன்' திரைப்படம் தயாராகி வருகிறது. இயக்குநர் அஹ்மத் இயக்கி இருக்கும் இப்படத்தில் ஹன்சிகா, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா, விவேக், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விரைவில் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. 'மனிதன்' படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

இதுவரை அவர் நடித்த படங்கள் அனைத்துமே, அவரே தயாரித்து வெளியிட்டு வந்தார். தற்போது முதன்முறையாக ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நாயனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். வெளி தயாரிப்பாளர் தயாரிப்பில் உருவாகும் முதல் படமாக இப்படம் அமைய இருக்கிறது.

இதற்கான கதை தேர்வு படலத்தை தீவிரப்படுத்தி இருக்கிறது ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம். ஜூலை மாதம் முதல் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x