Published : 16 Jul 2021 20:59 pm

Updated : 16 Jul 2021 21:04 pm

 

Published : 16 Jul 2021 08:59 PM
Last Updated : 16 Jul 2021 09:04 PM

டிகேவின் 'கருங்காப்பியம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

karungappiyam-first-look-released

சென்னை

டிகே இயக்கத்தில் உருவாகியுள்ள 'கருங்காப்பியம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

டிகே இயக்கத்தில் வைபவ், வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காட்டேரி'. இந்தப் படம் கரோனா அச்சுறுத்தலால் இன்னும் வெளியாகாமல் உள்ளது.


இந்தப் படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டார் டிகே. முழுக்க நாயகிகளை மையப்படுத்திய ஹாரர் படமாக இது உருவாகியுள்ளது. 'கருங்காப்பியம்' எனத் தலைப்பிடப்பட்டு இன்று (ஜூலை 16) ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் காஜல் அகர்வால், ரெஜினா, ஜனனி, ரைசா, கலையரசன், யோகி பாபு, கருணாகரன், ஜான் விஜய், ஷா ரா, விஜே பார்வதி, விஜே ஆஷிக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் ஈரான் நடிகை நொய்ரிகா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒளிப்பதிவாளராக விக்கி, இசையமைப்பாளராக எஸ்.என்.பிரசாத், எடிட்டராக விஜய் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். 'கருங்காப்பியம்' படத்தை வெற்றிவேல் டாக்கீஸ், பேவ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் ஏ.பி. இண்டர்நேஷன்ல் ஆகிய நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.

'கருங்காப்பியம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடையும் தறுவாயில் உள்ளன.


தவறவிடாதீர்!

இயக்குநர் டி.கேகருங்காப்பியம்கருங்காப்பியம் ஃபர்ஸ்ட் லுக்காஜல் அகர்வால்ரெஜினாயோகி பாபுOne minute newsKarungappiyamKarungappiyam first lookKajal agarwalReginaYogi babu

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x