Last Updated : 19 Dec, 2015 04:53 PM

 

Published : 19 Dec 2015 04:53 PM
Last Updated : 19 Dec 2015 04:53 PM

என்னை விட சிவகார்த்திகேயன் பிரபலம்: ரசிகருக்கு மாதவனின் சுவாரசிய பதில்

"தமிழில் என்னை விட சிவகார்த்திகேயன் மிகவும் பிரபலம்" என 'இறுதிச்சுற்று' ட்ரெய்லர் வெளியீடு குறித்து ரசிகருக்கு மாதவன் பதில்.

சுதா இயக்கத்தில் நீண்ட நாட்கள் கழித்து மாதவன் தமிழில் நடித்திருக்கும் படம் 'இறுதிச்சுற்று'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தை சி.வி.குமார் மற்றும் சசிகாந்த் இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

'இறுதிச்சுற்று' திரைப்படத்தை இந்தியிலும் 'சாலா காதூஸ்(Saala Khadoos)' என்ற பெயரில் படமாக்கி வந்தார்கள். தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளிலும் தயாரான இப்படத்தை ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் மற்றும் யு.டிவி நிறுவனம் இணைந்து வாங்கியிருக்கிறார்கள்.

இப்படத்தின் தமிழ் ட்ரெய்லரை சிவகார்த்திகேயன் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார். சிவகார்த்திகேயன் ட்ரெய்லரை வெளியிடுவது குறித்து ரசிகர் ஒருவர், "இந்திய அளவில் பிரபலமான நடிகர் ஒருவரின் படத்தின் ட்ரெய்லரை அவரை விட குறைவான பிரபலம் ஒருவர் எப்படி வெளியிடலாம்?" என்று மாதவனிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு மாதவன், "சிவகார்த்திகேயன் ஒரு சிறந்த மனிதர் மட்டுமல்ல, திறமையான நடிகரும் கூட. தமிழ் திரையுலகில் என்னை விட அவர் பிரபலம்" என்று அந்த ரசிகர்கருக்கு பதிலளித்தார்.

மாதவனின் இந்த பதிலுக்கு சிவகார்த்திகேயன், "ஒவ்வொருவருமே கொண்டிருக்க வேண்டிய குணம் இது. உங்களது வார்த்தைகளுக்கு நன்றி. என்றும் நீங்கள் தான் பிரபலம்" என்று தெரிவித்திருக்கிறார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x