Published : 17 Mar 2021 20:32 pm

Updated : 17 Mar 2021 20:32 pm

 

Published : 17 Mar 2021 08:32 PM
Last Updated : 17 Mar 2021 08:32 PM

முன்னணி இயக்குநர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்: வைரலாகும் புகைப்படங்கள்

lokesh-kanagaraj-birthday

சென்னை

முன்னணி இயக்குநர்களுடன் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் லோகேஷ் கனகராஜ்.

'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படங்கள் அடைந்த வெற்றியால், தற்போது முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். அடுத்து கமல் நடிப்பில் உருவாகும் 'விக்ரம்' படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.


தற்போது 'விக்ரம்' படத்தின் முதற்கட்டப் பணிகளைக் கவனித்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். கடந்த மார்ச் 14-ம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் லோகேஷ் கனகராஜ். அவருக்குத் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்நிலையில், தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான மணிரத்னம், ஷங்கர், கெளதம் மேனன், லிங்குசாமி, சசி, வசந்தபாலன் உள்ளிட்ட பலரும் இணைந்து கேக் வெட்டி லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளனர். இதன் புகைப்படங்களை லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

கரோனா ஊரடங்கு சமயத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்கள் அனைவருமே வாட்ஸ் அப் குரூப் மூலம் நட்பு பாராட்டி வந்தனர். சக இயக்குநர்களின் பிறந்த நாளுக்கு ஒன்றுகூடி நேரில் நட்பு பாராட்டுவது தொடர்கிறது.


தவறவிடாதீர்!

லோகேஷ் கனகராஜ்லோகேஷ் கனகராஜ் பிறந்த நாள்மணிரத்னம்ஷங்கர்லிங்குசாமிவசந்தபாலன்சசிமாஸ்டர் இயக்குநர்One minute newsLokesh kanagarajLokesh kanagaraj birthdayManiratnamShankarLingusamyVasanthabalanSasiLokesh kanagaraj birthday celebration

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x