Published : 17 Mar 2021 05:06 PM
Last Updated : 17 Mar 2021 05:06 PM

பொன்.ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி: சன் பிக்சர்ஸ் தயாரிப்பு

சென்னை

பொன்.ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

தமிழில் 'லாபம்', 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', 'துக்ளக் தர்பார்' உள்ளிட்ட படங்களை முடித்துவிட்டார் விஜய் சேதுபதி. இதற்கான டப்பிங் பணிகளையும் முடித்துக் கொடுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து பொன்.ராம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கினார் விஜய் சேதுபதி.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த எந்தவொரு அறிவிப்புமே இல்லாமல் இருந்தது. தற்போது இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பொன்.ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் விஜய் சேதுபதியுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது அறிவிக்கப்படவில்லை. ஒளிப்பதிவாளராக தினேஷ் கிருஷ்ணன், இசையமைப்பாளராக இமான், எடிட்டராக விவேக் ஹர்ஷன் உள்ளிட்டோர் தொழில்நுட்பக் கலைஞர்களாக பணிபுரியவுள்ளனர்.

இந்தப் படத்துக்காக வெளியிடப்பட்டுள்ள ப்ரோமோ வீடியோவின் மூலம், இதில் விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார் என்பது தெளிவாகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x