Published : 02 Oct 2020 01:56 PM
Last Updated : 02 Oct 2020 01:56 PM

இந்தியில் ரீமேக்காகும் கோலமாவு கோகிலா

தமிழில் பெரும் வரவேற்பு பெற்ற 'கோலமாவு கோகிலா' படத்தின் இந்தி ரீமேக் உறுதியாகியுள்ளது.

2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'கோலமாவு கோகிலா'. நயன்தாரா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், ஆர்.எஸ்.சிவாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். லைகா நிறுவனம் தயாரித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்திருந்தார்.

இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் இதன் ரீமேக் உரிமைக்குப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், சில நாட்களுக்குப் பிறகு எந்தவொரு தகவலுமே இல்லாமல் போனது.

சில தினங்களுக்கு முன்பு கன்னட ரீமேக் உறுதியானது. இதில் நயன்தாரா கதாபாத்திரத்தில் ரட்சிதா ராம் நடிக்கவுள்ளார். தற்போது இந்தி ரீமேக்கும் உறுதியாகியுள்ளது. இந்தியில் நயன்தாரா கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

'கோலமாவு கோகிலா' இந்தி ரீமேக்கை ஆனந்த் எல்.ராய் தயாரிக்கவுள்ளார். யார் இயக்குநர், நயன்தாராவுடன் யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்ற விவரம் விரைவில் தெரியவரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x