Published : 13 Aug 2020 10:55 am

Updated : 13 Aug 2020 10:55 am

 

Published : 13 Aug 2020 10:55 AM
Last Updated : 13 Aug 2020 10:55 AM

ஓடிடி தளத்தில் வெளியாகிறது 'வி': திரையுலகினர் வியப்பு

v-releases-in-amazon-prime

சென்னை

நானி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக கணிக்கப்படும் 'வி', என்ற படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

மோகன் கிருஷ்ணா இயக்கத்தில் நானி, சுதீர் பாபு, நிவேதா தாமஸ், அதிதி ராவ், ஜகபதி பாபு, வெண்ணிலா கிஷோர், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வி'. இது நானி நடிப்பில் உருவாகியுள்ள 25-வது படமாகும்.

இந்தப் படத்தின் டீஸர் மூலம் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஏனென்றால், 'வி' படத்தில் நானி முதன்முறையாக வில்லனாக நடித்துள்ளார். கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் திட்டமிட்டப்படி வெளியாகவில்லை. பலமுறை ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியான போது படக்குழு மறுப்பு தெரிவித்தது.

இதனிடையே, இந்தப் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதியாகி இருக்கிறது. அமேசான் ப்ரைம் ஓடிடி தளம் 'வி' படத்தின் உரிமையைப் பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ளது. தென்னிந்தியத் திரையுலகில் ஒரு முன்னணி நாயகனின் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் படமாக 'வி' அமைந்துள்ளது.

'வி' படக்குழுவினரின் இந்த திட்டத்தினால் திரையுலகினர் பலரும் வியப்படைந்துள்ளனர். ஏனென்றால், நானியின் 25-வது படம் என்பதால் பெரிதாக விளம்பரப்படுத்தத் திட்டமிட்டு இருந்தனர். இறுதியாக கரோனா அச்சுறுத்தலால் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

தவறவிடாதீர்!

நானிவி திரைப்படம்ஓடிடி தளத்தில் விஇயக்குநர் மோகன கிருஷ்ணாதில் ராஜுஅமேசான் ப்ரைம்One minute newsVNani vV movieV movie releases in ott

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author