Published : 12 Aug 2020 11:56 am

Updated : 12 Aug 2020 11:56 am

 

Published : 12 Aug 2020 11:56 AM
Last Updated : 12 Aug 2020 11:56 AM

கடும் உடல்நலக் குறைவு: இயக்குநர் நிஷிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

filmmaker-nishikant-kamat-hospitalised-in-hyderabad-with-liver-cirrhosis

இயக்குநரும் நடிகருமான நிஷிகாந்த் கமத் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அஜய் தேவ்கன் நடித்த ‘த்ரிஷ்யம்’, ஜான் ஆபிரகாமின் ‘ஃபோர்ஸ்’, ‘ராக்கி ஹேண்ட்ஸம்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கிய்வர் நிஷிகாந்த் கமத். 2005ஆம் ஆண்டு மராத்தியில் வெளியான ‘டோம்பிவாலி ஃபாஸ்ட்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தை தமிழிலும் மாதவனை வைத்து ‘எவனோ ஒருவன்’ என்ற பெயரில் ரீமேக் செய்தார். இது தவிர ஏராளமான திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக கல்லீரல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த நிஷிகாந்த் ஹைதரபாத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (12.08.20) மீண்டும் கடும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நிஷிகாந்த்.

சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் நிஷிகாந்த் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தவறவிடாதீர்!


Nishikant KamatHyderabadLiver cirrhosisமருத்துவமனையில் அனுமதிஇயக்குநர் நிஷிகாந்த்கடும் உடல்நலக் குறைவுBollywood

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author