Published : 07 Aug 2020 17:38 pm

Updated : 07 Aug 2020 17:38 pm

 

Published : 07 Aug 2020 05:38 PM
Last Updated : 07 Aug 2020 05:38 PM

'இராவண கோட்டம்' டைட்டில் லுக் வெளியீடு

raavana-kottam-title-look-released

சென்னை

விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகும் 'இராவண கோட்டம்' படத்தின் டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

'மதயானைக் கூட்டம்' படம் வெளியாகி சுமார் 7 ஆண்டுகள் கழித்து விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இராவண கோட்டம்'. கண்ணன் ரவி தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து வருகிறார். இந்தப் படம் முதற்கட்டப் படப்பிடிப்புடன் நிறுத்தப்பட்டது.


பின்பு 'வானம் கொட்டட்டும்', 'மாஸ்டர்' என இதர படங்களில் பிஸியானார் சாந்தனு. இதனால் 'இராவண கோட்டம்' படத்தின் நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன. நேற்று (ஆகஸ்ட் 6) படத்தின் கதை தட்பவெப்பநிலையைப் பொறுத்தது என்றும், வருடத்துக்கு 3 மாதங்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடியும் என்றும் படக்குழு அறிவித்தது. மேலும், கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார்கள்.

இதனிடையே 'மாஸ்டர்' இயக்குநர் லோகேஷ் கனகராஜ், 'இராவண கோட்டம்' படம் தொடர்பாக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக அறிவித்தார்கள். அதன்படி, தற்போது 'இராவண கோட்டம்' படத்தின் டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். அதோடு, "இதுக்கு அப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்" என்று சாந்தனுவையும் வாழ்த்தியுள்ளார்.

தவறவிடாதீர்!


இராவண கோட்டம்இராவண கோட்டம் டைட்டில் லுக்சாந்தனுஇயக்குநர் விக்ரம் சுகுமாரன்விக்ரம் சுகுமாரன்ஐஸ்டின் பிரபாகரன்Raavana Kottam Title LookRaavana KottamShanthanuVikram sukumaranOne minute news

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author