Published : 14 Jul 2020 22:35 pm

Updated : 14 Jul 2020 22:39 pm

 

Published : 14 Jul 2020 10:35 PM
Last Updated : 14 Jul 2020 10:39 PM

அல்லு அர்ஜுன் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகல்

vijay-sethupathi

ஹைதராபாத்

அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ள 'புஷ்பா' படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளார்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'அலா வைகுந்தபுரம்லோ' படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை பல்வேறு மொழிகளின் இயக்குநர்கள் பாராட்டியுள்ளனர். 'அலா வைகுந்தபுரம்லோ' படத்துக்குப் பிறகு அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ள படம் 'புஷ்பா'.

சுகுமார் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இதில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. ஆனால், இந்தப் படத்திலிருந்து தற்போது விஜய் சேதுபதி விலகியுள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை. இந்த அச்சுறுத்தல் முடிந்தவுடன் பல்வேறு படங்களை முடிக்க வேண்டியதிருப்பதால், 'புஷ்பா' படத்துக்குத் தேதிகள் ஒதுக்க முடியாது என்று இயக்குநர் சுகுமாரிடம் தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.

தற்போது விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்ற ஆலோசனையில் படக்குழு இறங்கியுள்ளது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

புஷ்பாபுஷ்பா படப்பிடிப்புஅல்லு அர்ஜுன்அல்லு அர்ஜுன் திரைப்படம்ராஷ்மிகா மந்தனாஇயக்குநர் சுகுமார்விஜய் சேதுபதிவிஜய் சேதுபதி விலகல்One minute newsPushpaPushpa shootingAllu arjunAllu arjun movieRashmikaVijay sethupathiVijay sethupathi shooting

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author