Published : 08 Jun 2020 04:59 PM
Last Updated : 08 Jun 2020 04:59 PM

'சீயான் 60' அதிகாரபூர்வ அறிவிப்பு

விக்ரமின் 60-வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'பொன்னியின் செல்வன்' மற்றும் 'கோப்ரா' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம். இவ்விரண்டு படங்களின் படப்பிடிப்புகளுமே கரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 'கோப்ரா' இறுதிக்கட்டப் படப்பிடிப்பை எட்டியுள்ளது. இன்னும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் சுமார் 60% படப்பிடிப்பு பாக்கியிருக்கிறது.

இதனிடையே இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து உருவாகவுள்ள 'சீயான் 60' படத்தை உறுதி செய்திருக்கிறார் விக்ரம். இந்தப் படம் குறித்த தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அதிகாரபூர்வ அறிவிப்பு படக்குழுவினரின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

'சீயான் 60' படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார். இதில் விக்ரமுடன் இணைந்து துருவ் விக்ரமும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அனிருத் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார். தற்போது 'கோப்ரா' படத்தைத் தயாரித்து வரும் லலித், 'சீயான் 60' படத்தையும் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார்.

இதன் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல் எல்லாம் முடிந்தவுடன், செப்டம்பரில் தொடங்கவுள்ளது. முழுவீச்சில் படப்பிடிப்பை முடித்து 2021-ம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாகத் திரைக்கு வரும் என்று அதிகாரபூர்வமாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது விக்ரம் - துருவ் விக்ரமுடன் நடிக்கும் நடிகர் - நடிகைகள் தேர்வு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x