Last Updated : 02 Apr, 2020 04:38 PM

 

Published : 02 Apr 2020 04:38 PM
Last Updated : 02 Apr 2020 04:38 PM

கரோனா தொற்று; பிரபல ஜாஸ் பாடகர் காலமானார்

ஜாஸ் பியானோ இசைக் கலைஞர், ஆசிரியர் எல்லிஸ் மார்ஸலிஸ் கோவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 85.

அமெரிக்காவின் பிரபலமான இசைக் கலைஞர்களில் ஒருவர் எல்லிஸ் மார்ஸலிஸ். நியூ ஆர்லியன்ஸின் படைப்பாற்றல் கலைகளுக்கான மையத்தின் முதல் ஜாஸ் இசை ஆசிரியரும் இவரே. இவரது மகன்கள் நால்வரும் தந்தையின் பாதையில் இசைத் துறையினுள் நுழைந்தனர். இதில் பிராண்ட்ஃபோர்ட் மற்றும் விண்டொன் ஆகியோர் சர்வதேசப் புகழ் பெற்றனர். குடும்பமே இசைத் துறையில் இருப்பதால் நியூ ஆர்லியன்ஸ் இசைப் படையின் தலைவர் என்று மார்ஸலிஸ் அறியப்பட்டார்.

கரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மார்ஸலிஸ் சிகிச்சை பெற்று வந்தார். புதன்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். "நிமோனியா காய்ச்சல்தான் அவரது மரணத்துக்குக் காரணம். ஆனால் நிமோனியா வந்ததற்கான காரணம் கோவிட்-19 தொற்றே" என்று மார்ஸலிஸின் மகன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x