Published : 12 Mar 2020 07:45 PM
Last Updated : 12 Mar 2020 07:45 PM

ரசிகர்கள் ஏமாற்றமா? - ரஜினி பேச்சுக்கு 'நான் சிரித்தால்' பட இயக்குநர் பெருமிதம்

ரஜினியின் இன்றைய பேச்சுக்கு, 'நான் சிரித்தால்' இயக்குநர் ராணா பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று (மார்ச் 12) சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ரஜினி. அப்போது தனது அரசியல் பார்வை, அரசியல் மாற்றம் ஏற்படுத்த வைத்துள்ள 3 திட்டங்கள் உள்ளிட்ட பல விஷயங்களை எடுத்துரைத்தார்.

தன் கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் கட்சித் தலைமையும் ஆட்சித் தலைமையும் வெவ்வேறாக இருக்கும். நான் கட்சித் தலைவராக மட்டுமே இருப்பேன் என்று ரஜினி கூறினார். இளைஞர்களிடம் எழுச்சி ஏற்பட்ட பிறகு அரசியலுக்கு வருவேன் என்று ரஜினி தெரிவித்தார்.

ரஜினியின் அரசியல் பார்வை அவரது ரசிகர்கள் மத்தியில் சிலருக்கு ஏமாற்றத்தையும், சிலருக்கு உற்சாகத்தையும் அளித்துள்ளது. ரஜினியின் தீவிர ரசிகரான 'நான் சிரித்தால்' இயக்குநர் ராணா, அவரது இன்றையப் பேச்சு குறித்து தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

”ஒரு dream come true தமிழ்நாட்டை பார்க்கணும்கற ஆசை தான், தலைவர் அரசியலுக்கு வரணும்கற எண்ணத்தையே கொடுத்தது. எத்தனையோ பேரு அரசியலுக்கு வந்திருக்காங்க. அவங்க மாதிரி கூட்டம் இருக்குனு நானும் அரசியலுக்கு வரேன்’ன்னு அவரு அரசியலுக்கு வந்து அவரும் ஒரு சாதாரண ஆட்சி தந்தா, அது தான் உண்மையான ரசிகனுக்கும், அவர் மேல அன்பு, நம்பிக்கை வைத்த மக்களுக்கும் ஏமாற்றமாக இருக்கும். நாங்க உங்கள் பின்னாடி நிற்கிறது ஒரே ஒரு எதிர்பார்ப்பு ஓட தான் தலைவா, இந்த நாடும் நாட்டு மக்களும் நல்ல இருக்கணும். அவங்க உங்களை வாழ்த்துறதை எங்க காதால கேட்டு பெருமைபடணும்.

முதலமைச்சர் பதவி என்ன தலைவா பிஸ்கோத்து. முதலமைச்சர் அப்படிங்கிற பதவிக்கே நீ உட்கார்ந்தா தான் தலைவா கெத்து. நீங்க சிங்கப்பூர்ல இருந்து எங்களுக்காகத் திரும்பி வந்ததே எங்களுக்கு சந்தோஷம். இப்போது படம் நடிச்சிட்டு இருக்கிறது அடுத்த சந்தோஷம், அரசியலுக்கு வர்றது அடுத்த சந்தோஷம், நல்லாட்சி தரப் போறது பெரிய சந்தோஷம். 'முதல்வன்' படத்தில் நீங்கள் நடிக்கவில்லைனு இன்றைக்கு வரைக்கும் பொலம்பிக்கிட்டு இருக்கிற ஊர் தலைவா. டக்குனு இந்த முடிவை ஏத்துக்க கஷ்டமாகத் தான் இருக்கும்.

ஆனா யோசிச்சு பார்த்தால் நம்ம லட்சியத்தை அடைய சொந்த விருப்பு வெறுப்புகளை தூக்கி போடணும்னு உணர முடியும். பொதுமக்களும், உங்கள் மீது உண்மையான அன்பும், நம்பிக்கையும் கொண்ட ரசிகர் படை இருக்கு தலைவா, வா தலைவா. இப்படி ஒரு தன்னலமற்ற தலைவன் என்று தலைமுறைகள் தாண்டி பேசப்படட்டும். Why be a king, when you can be a god. ரசிகர்கள் ஏமாற்றமா? போங்கடா! பெருமைடா!”

இவ்வாறு ராணா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x