Published : 10 Feb 2020 12:49 PM
Last Updated : 10 Feb 2020 12:49 PM

’செம்பருத்தி’ சீரியல் நடிகைக்குத் திருமணம் நடந்தது

'செம்பருத்தி' சீரியலில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரதா நாயுடுவுக்கு சில நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் 'செம்பருத்தி'. இதற்கென்று தனி ரசிகர் கூட்டம் உண்டு. கார்த்திக் ராஜ், ஷாபனா, ப்ரியா ராமன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த சீரியலில் எதிர்மறை நாயகியாக நடித்து வருபவர் பரதா நாயுடு.

சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் பரத் என்பவருடன் இவருக்குத் திருமணம் நடந்தது. இதில் இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மேலும், இந்தத் திருமணம் தொடர்பாக எந்தவொரு அதிகாரபூர்வ தகவலுமே வெளியாகவில்லை.

சீரியல் நடிகையான இந்து ரவிச்சந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், பரதா நாயுடுவுக்கும் பரத்துக்கும் திருமணம் நடந்த புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன் மூலமே பரதா நாயுடுவுக்குத் திருமணம் நடந்த தகவல் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பரதா நாயுடுவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x