Published : 08 Feb 2020 03:33 PM
Last Updated : 08 Feb 2020 03:33 PM

விஜய் அரசியல்வாதி அல்ல; பாஜகவினர் போராட்டம் தேவையற்றது: இயக்குநர் பேரரசு

விஜய் அரசியல்வாதி அல்ல என்றும் பாஜகவினர் போராட்டம் தேவையற்றது என்றும் இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு தளத்தில் நேற்று (பிப்ரவரி 7) மாலை பாஜக கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு உண்டானது. அவர்களுக்கு எதிராக விஜய் ரசிகர்களும் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அவர்களைக் கலைக்க போலீஸார் சிறிதாகத் தடியடி நடத்தினார்கள்.

பாஜக நடத்திய போராட்டத்துக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே, இந்தப் போராட்டம் குறித்து சமீபத்தில் பாஜகவில் இணைந்த இயக்குநர் பேரரசு தனது ட்விட்டர் பதிவில், "நெய்வேலியில் விஜய் படப்பிடிப்பில் பாஜக வினர் போராட்டம் தேவையற்றது.

விஜய் நடிகர், அரசியல்வாதி அல்ல. இந்தமாதரி செயல்பாடுகள் பாஜகவின் மீது மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கும். அவருடைய கோடானுகோடி ரசிகர்களுக்கு மனவேதனையைத் தரும். நாட்டில் போராட வேண்டிய எத்தனையோ விஷயங்கள் இருக்கு” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x