Published : 15 Jan 2020 06:59 PM
Last Updated : 15 Jan 2020 06:59 PM

'மாஸ்டர்' செகண்ட் லுக் வெளியீடு!

பொங்கல் திருநாளை முன்னிட்டு 'மாஸ்டர்' படத்தின் செகண்ட் லுக் இன்று வெளியானது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாஸ்டர்'. விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, வி.ஜே.ரம்யா, கெளரி கிஷண் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு, பிலோமின் ராஜ் எடிட்டிங், ஸ்டண்ட் சில்வா சண்டைப்பயிற்சி, சதீஷ்குமாரின் கலை இயக்கம் ஆகிய துறைகளைக் கவனிக்க லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், பொன் பார்த்திபன் ஆகிய மூவரும் வசனங்களை எழுதியுள்ளனர்.

'மாஸ்டர்' படப்பிடிப்பு சுமார் 75% வரை முடிந்துவிட்டது. ஷிமோகா படப்பிடிப்பைத் தொடர்ந்து, சென்னையில் தற்போது மும்முரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமே வெளியான நிலையில் படத்தின் உலகளாவிய உரிமைகள் அனைத்தையும் லலித் கைப்பற்றினார்.
மேலும், இந்தப் படத்தின் இதர மொழி உரிமைகள் தொடங்கி அனைத்துமே விற்பனையாகி விட்டன.

இந்நிலையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு 'மாஸ்டர்' படத்தின் செகண்ட் லுக் இன்று வெளியானது. விஜய் சேதுபதியின் லுக் வெளியாகும் என்று எதிர்பார்த்த தருணத்தில், விஜய்யின் லுக் மட்டும் மீண்டும் வெளியாகியுள்ளது. போஸ்டரில் விஜய்யுடன் இருக்கும் மாணவர்கள் அனைவரும் கருப்பு டி-ஷர்ட் அணிந்துள்ளனர். விஜய் கருப்புச் சட்டை அணிந்துள்ளார்.

செகண்ட் லுக்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x