Published : 06 Jan 2020 03:57 PM
Last Updated : 06 Jan 2020 03:57 PM

கோல்டன் க்ளோப் விருதுகள் முழு பட்டியல்: சிறந்த நடிகராக ஹாக்கின் ஃபீனிக்ஸ் தேர்வு

விருதுடன் ஹாக்கின் ஃபீனிக்ஸ்

கோல்டன் க்ளோப் 2020 விருது வழங்கு விழா கலிஃபோர்னியாவில் நடந்து முடிந்தது. இதில் சிறந்த நடிகருக்கான விருதை 'ஜோக்கர்' படத்தில் நடித்த ஹாக்கின் ஃபீனிக்ஸ் வென்றார்.

ஹாலிவுட் ஃபாரின் ப்ரெஸ் அசோசியேஷன் என்கிற அமைப்பு சினிமா மற்றும் சின்னத்திரையில் சிறந்த படைப்புகளையும், கலைஞர்களையும் வருடா வருடம் கவுரவித்து வருகிறது. இதுவே கோல்டன் குளோப் என்றழைக்கப்படுகிறது. ஆஸ்கருக்கு இணையாகப் போற்றப்படும் இந்த விருது வழங்கும் விழாவின் 77-வது பதிப்பு கலிஃபோர்னியா பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நடந்து முடிந்தது.

இதில், க்வெண்டின் டாரண்டீனோ இயக்கத்தில் வெளியான 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்' படத்துக்கு சிறந்த உறுதுணை நடிகர், சிறந்த திரைக்கதை, சிறந்த நகைச்சுவை / மியூஸிக்கல் திரைப்படம் என மூன்று பிரிவுகளில் விருதுகள் கிடைத்தன. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'ஐரிஷ்மேன்' எந்த விருதையும் பெறாதது பல ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது.

விருதுகள் முழு பட்டியல் (திரைப்படங்கள் மட்டும்)

சிறந்த (டிராமா) திரைப்படம் - 1917

சிறந்த நடிகை (டிராமா) - ரினே ஸெல்வெகர் (ஜூடி)

சிறந்த நடிகர் (டிராமா) - ஹாக்கின் ஃபீனிக்ஸ் (ஜோக்கர்)

சிறந்த (நகைச்சுவை / மியூஸிக்கல்) திரைப்படம் - ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்

சிறந்த நடிகை (நகைச்சுவை / மியூஸிக்கல்) - அக்வாஃபீனா (தி ஃபேர்வெல்)

சிறந்த நடிகர் (நகைச்சுவை / மியூஸிக்கல்) - டாரன் எகெர்டன் (தி ராக்கெட்மேன்)

சிறந்த உறுதுணை நடிகர் - பிராட் பிட் (ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்)

சிறந்த இசை - ஹில்டர் கூனடாட்டிர் (ஜோக்கர்)

சிறந்த இயக்குநர் - சாம் மெண்டிஸ் (1917)

சிறந்த பாடல் - ஐ எம் கான லவ் மீ அகைன் (ராக்கெட் மேன்)

சிறந்த உறுதுணை நடிகை - லாரா டெர்ன் (மேரேஜ் ஸ்டோரி)

சிறந்த அனிமேஷன் திரைப்படம் - மிஸ்ஸிங் லின்க்

சிறந்த திரைக்கதை - க்வெண்டின் டாரண்டீனோ (ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்)

சிறந்த அயல் மொழித் திரைப்படம் - பாராஸைட்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x