Published : 02 Jan 2020 06:31 PM
Last Updated : 02 Jan 2020 06:31 PM

'சிரஞ்சீவி 152' படப்பிடிப்பு தொடக்கம்

கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, சுதீப், அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சைரா நரசிம்மா ரெட்டி'. தெலுங்கைத் தவிர்த்து இதர மொழிகளில் இந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இது சிரஞ்சீவி நடிப்பில் வெளியான 151-வது படமாகும்.

சீரஞ்சிவியின் 152-வது படத்தின் பூஜை 2019-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி போடப்பட்டது. கொரட்டலா சிவா இயக்கவுள்ள இந்தப் படத்தையும் ராம் சரணே தயாரிக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக திரு, கலை இயக்குநராக சுரேஷ் செல்வராஜன் பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

இந்தப் படத்தின் பூஜை முடிவடைந்தாலும், படப்பிடிப்பு எப்போது என்பது தெரியாமலேயே இருந்தது. இதனிடையே, இன்று (ஜனவரி 2) முதல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணி இவ்வளவு நாள் நடைபெற்று வந்ததாகவும், அதில் பாடல் காட்சி மற்றும் படத்தின் பிரதான காட்சிகள் அனைத்தும் படமாக்கவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்தார்கள்.

இதில் நாயகியாக த்ரிஷா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x