Published : 02 Jan 2020 04:58 PM
Last Updated : 02 Jan 2020 04:58 PM

மீண்டும் வெற்றிமாறனுடன் ஜி.வி.பிரகாஷ் கூட்டணி

வெற்றிமாறன் - சூர்யா இணையும் படத்துக்கு இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமானார்.

'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'விசாரணை', 'அசுரன்' என வெற்றிமாறன் படங்களில் இசையமைப்பாளராகப் பணிபுரிந்தவர் ஜி.வி.பிரகாஷ். அவரது இயக்கத்தில் வெளியான 'வடசென்னை' படத்துக்கு மட்டும் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்தார்.

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கவுள்ளார். இதன் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்கு யார் இசையமைப்பாளர் என்பது முடிவாகவில்லை. சூரி படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சூர்யா நடிக்க ஒப்பந்தமானார்.

தாணு தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமானார். இது ஜி.வி.பிரகாஷின் 75-வது படமாக அமைந்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x