Published : 30 Dec 2019 05:19 PM
Last Updated : 30 Dec 2019 05:19 PM

நடிகை ரவீனா டன்டன், இயக்குநர் ஃபாரா கான் மீது வழக்கு

பஞ்சாபில் நடிகை ரவீனா டன்டன், இயக்குநர் ஃபாரா கான் மற்றும் நகைச்சுவையாளர் பாரதி சிங்குக்கு எதிராக இரண்டாவது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கிறிஸ்துவர்களின் நம்பிக்கைகளைப் புண்படுத்தியதாக இவர்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை இதே குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் மூன்று பேர் மீதும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது காம்போஜ் நகரைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் பேரில் இரண்டாவது முறையாக வழக்குப் பதிவாகியுள்ளது. இது தொடர்பான விசாரணை நடந்து வருவதாக அமிரிஸ்தர் காவல்துறை கண்காணிப்பாளர் விக்ரம் ஜீது துக்கால் தெரிவித்துள்ளார். இதைத் தவிர மகாராஷ்டிராவிலும் இவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவாகியுள்ளதாகத் தெரிகிறது.

இந்த மூன்று பிரபலங்களுக்கும் எதிராக சில கிறிஸ்துவ அமைப்புகள் எதிர்ப்புப் போராட்டங்களும் நடத்தியுள்ளன.

கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாள் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்த மூன்று பேரும் கிறிஸ்துவர்களின் நம்பிக்கையைக் காயப்படுத்தும் விதமாகப் பேசினார்கள் என்று புகார்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அன்றே ஃபாரா கான் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். எதையும் அவமரியாதை செய்ய வேண்டும் என்று எனக்கு நோக்கமில்லை. ரவீனா டன்டன், பாரதி சிங் மற்றும் நான் உட்பட ஒட்டு மொத்த குழுவின் சார்பாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

"நான் கூறிய வார்த்தையை எந்த மதத்தையும் புண்படுத்தும் விதமாகப் புரிந்துகொள்ள முடியாது. நாங்கள் மூவருமே எப்போதுமே எவரையும் காயப்படுத்த எண்ணவில்லை. அப்படி நடந்திருந்தால் காயப்பட்டவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என ரவீனா டன்டன் ட்வீட் செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x