Published : 28 Dec 2019 11:28 AM
Last Updated : 28 Dec 2019 11:28 AM

'தலைவர் 168' அப்டேட்: வியக்க வைக்கும் சிவா

'தலைவர் 168' படப்பிடிப்பில் அனைவரையும் வியக்க வைக்கும் வண்ணம் வேலைகளைக் கச்சிதமாக வாங்கி வருகிறார் இயக்குநர் சிவா.

'தர்பார்' படத்தின் பணிகளை முடித்துவிட்டு, சிவா இயக்கத்தில் உருவாகும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரித்துவரும் இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

இதில், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்து வருகின்றனர். டி.இமான் இசையமைக்க, வெற்றி ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்து வருகிறார். முதலில் பாடல் காட்சி ஒன்றைப் படமாக்கி முடித்துவிட்டு, தற்போது முக்கியமான சில காட்சிகளைப் படமாக்கி வருகின்றனர்.

‘சென்டிமென்ட் இடங்களில் சமரசமே இருக்கக் கூடாது. அதுதான் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக அமையும்’ என்ற ஃபார்முலாவோடு அஜித் படங்களில் வேலை பார்த்தவர் சிவா. தற்போதும் அதில் அவர் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

'தலைவர் 168' படப்பிடிப்பு தளத்தில், ரஜினி, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்ளிட்ட அனைவரது காட்சிகளையும், அவரே நடித்துக்காட்டி வேலை வாங்குவதைப் படக்குழுவினர் வியப்புடன் பார்க்கின்றனர். மேலும், தனக்கு என்ன தேவை என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறாராம். இதனால், ரஜினியும் படு உற்சாகத்தில் இருக்கிறார் என்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x