Published : 27 Dec 2019 09:41 PM
Last Updated : 27 Dec 2019 09:41 PM
'அசுரன்' படத்தின் வெற்றியால், 2019-ம் ஆண்டு இந்தியளவில் இ-புக் விற்பனையில் 'வெக்கை' நாவல் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அசுரன்'. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். தாணு தயாரிப்பில் அக்டோபர் 4-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் வியாபாரம் 100 கோடியைக் கடந்துள்ளது, தனுஷ் நடிப்பில் வெளியான படங்களில் சாதனைப் புரிந்தது.
இந்தப் படம் எழுத்தாளர் பூமணி எழுதிய 'வெக்கை' நாவலை மையப்படுத்தி உருவானது. இந்தப் படம் தொடர்பாகத் தனது விமர்சனத்தையும் தெரிவித்துள்ளார் பூமணி. 'அசுரன்' வெற்றியால் அதன் தெலுங்கு ரீமேக் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
இதனிடையே ’அசுரன் படத்தின்’ வெற்றியால், யாருமே நினைத்திராத இன்னொரு சாதனை நிகழ்த்தியுள்ளது. என்னவென்றால் அமேசான் இணையத்தில் KINDLE என்ற பக்கம் உள்ளது. இதில் அனைத்து புத்தகங்களும் இ-புக் வடிவில் கிடைக்கும். இதில் 2019-ம் ஆண்டில் இந்தியளவில் அதிகமாக விற்கப்பட்ட இ-புக் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் பூமணி எழுதிய 'வெக்கை' நாவல் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 'அசுரன்' படத்துக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இந்த நாவலை எப்படி படமாக்கியிருக்கிறார் எனப் பலரும் தரவிறக்கம் செய்து படித்திருப்பதை இந்த விற்பனைக் காட்டுகிறது. இந்தத் தகவல் அமேசான் KINDLE இந்தியா பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்தச் சாதனை கண்டிப்பாக 'அசுரன்' படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியைத் தரும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
See what Indian language eBooks have been topping the charts in 2019 on ‘This Year in eBooks’ - https://t.co/HLXWuulRhq#KindleIndia pic.twitter.com/NTgoz0483o
— Amazon Kindle India (@KindleIndia) December 27, 2019
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT