Last Updated : 25 Dec, 2019 12:10 PM

 

Published : 25 Dec 2019 12:10 PM
Last Updated : 25 Dec 2019 12:10 PM

கெளதம் மேனன் - அனுஷ்கா படத்தின் கதைக்களம்

'ஜோஷ்வா' படத்தைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் அனுஷ்கா நடிக்கவுள்ள படத்தின் கதைக்களம் என்ன என்பது வெளியாகியுள்ளது.

'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தைத் தொடர்ந்து வருண் நாயகனாக நடிக்கும் 'ஜோஷ்வா' படத்தை இயக்கி வருகிறார் கெளதம் மேனன். வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. காதலர் தினத்துக்கு வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

’ஜோஷ்வா’ படத்தை முடித்துவிட்டு, அனுஷ்கா நடிக்கவுள்ள படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் கெளதம் மேனன். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கான முதற்கட்டப் பணிகளைத் துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான படப்பிடிப்பு இடங்கள் தேர்வைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அனுஷ்கா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள இந்தப் படம் ராணுவத்தை மையப்படுத்திய ஒரு த்ரில்லர் கதையாகும். இம்மாதிரியான கதைக்களம் தமிழ் சினிமாவில் வந்ததில்லை என்பதால், கூடுதல் கவனமெடுத்து பணிபுரிந்து வருகிறார்கள்.

அனுஷ்கா தவிர்த்து இதர நடிகர்கள் யார் என்பது, 'ஜோஷ்வா' படம் வெளியானவுடன் அறிவிக்கப்படும் எனப் படக்குழுவினர் சார்பில் தெரிவித்தார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x