Published : 22 Dec 2019 07:55 PM
Last Updated : 22 Dec 2019 07:55 PM

த்ரிஷா, தனுஷ், விஜய் சேதுபதிக்கு ஃபிலிம்ஃபேர் விருது; வென்றவர்களின் பட்டியல் 

2019-ம் ஆண்டுக்கான 66-வது ‘ஃபிலிம்ஃபேர்’விருது வழங்கும் விழா நேற்று சென்னையில் நேரு உள்விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிப் படங்களைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்றனர்.

சந்தீப் கிஷனும், ரெஜினாவும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.

விருது வென்றவர்கள் பட்டியல்

சிறந்த படம் - பரியேறும் பெருமாள்
சிறந்த இயக்குநர் - ராம்குமார் (ராட்சசன்)
சிறந்த நடிகர் - தனுஷ் (வடசென்னை), விஜய் சேதுபதி (96)
சிறந்த நடிகை - த்ரிஷா (96)
விமர்சனரீதியில் சிறந்த நடிகை - ஐஸ்வர்யா ராஜேஷ் (கனா)
விமர்சனரீதியில் சிறந்த நடிகர் - அரவிந்த் சாமி (செக்கச்சிவந்த வானம்)
சிறந்த துணை நடிகர் - சத்யராஜ் (கனா)
சிறந்த துணை நடிகை - சரண்யா பொன்வண்ணன் (கோலமாவு கோகிலா)
சிறந்த அறிமுக நடிகை - ரைசா (பியார் பிரேமா காதல்)
சிறந்த இசையமைப்பாளர் - கோவிந்த் வசந்தா (96)
சிறந்த பாடல் – காதலே காதலே (96)
சிறந்த பாடலாசிரியர் - கார்த்திக் நேத்தா (காதலே காதலே 96)
சிறந்த பின்னணிப் பாடகர் – சித் ஸ்ரீராம் ( ஹேய் பெண்ணே – பியார் பிரேமா காதல்)
சிறந்த பின்னணிப் பாடகி – சின்மயி ( காதலே காதலே – 96)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x