Published : 21 Dec 2019 03:15 PM
Last Updated : 21 Dec 2019 03:15 PM

'சைக்கோ' ரிலீஸ் தள்ளிவைப்பு

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'சைக்கோ' படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது.

'கண்ணே கலைமானே' படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் உருவான 'சைக்கோ' படத்தில் நடித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

அதிதி ராவ், நித்யா மேனன், இயக்குநர் ராம், சிங்கம்புலி, 'ஆடுகளம்' நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகளை முடித்து தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு.

டிசம்பர் 27- ம் தேதி வெளியீடாக அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தின் தலைப்புக்கு ஆட்சேபம் தெரிவித்தது படக்குழு. மனநலப் பாதிப்பு தொடர்பான தலைப்புக்கு அனுமதியில்லை என்றும் குறிப்பிட்டார்கள். இறுதியில், மறுதணிக்கைக்குச் சென்று தலைப்பை உறுதி செய்துவிட்டாலும், என்ன சான்றிதழ் என்பதை இன்னும் தணிக்கை அதிகாரிகள் எழுத்து வடிவில் கொடுக்கவில்லை.

இதனால், டிசம்பர் 27-ம் தேதி 'சைக்கோ' வெளியாக வாய்ப்பு இருக்குமா என்ற கேள்வி எழுந்தது. இறுதியில், படக்குழுவினர் ஜனவரி 24-ம் தேதி 'சைக்கோ' வெளியாகும் என்று அறிவித்துள்ளது. தணிக்கை முடிவடைந்து, முழுமையாகப் படத்தை முடித்து வெளியீட்டுக்குத் தயாராக முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளது படக்குழு.

தற்போது மாறன் இயக்கத்தில் உருவாகும் 'கண்ணை நம்பாதே' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x