Published : 17 Dec 2019 07:33 PM
Last Updated : 17 Dec 2019 07:33 PM

'டிக்கிலோனா' அப்டேட்: ஹர்பஜன் சிங் காட்சிகள் படப்பிடிப்பு தொடக்கம்

'டிக்கிலோனா' படத்தில் ஹர்பஜன் சிங் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘டிக்கிலோனா’.‘பலூன்’ இயக்குநர் சினிஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை, கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா பணிபுரிந்து வருகிறார்.

இதில் சந்தானம் மூன்று கெட்டப்களில் நடித்து வருகிறார். யோகி பாபு, அனகா, ஷிரின் ஆனந்த் ராஜ், முனீஸ்காந்த், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷா ரா, அருண் அலெக்ஸாண்டர், நிழல்கள் ரவி, இட் ஈஸ் பிரசாந்த் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமாகிறார் ஹர்பஜன் சிங் எனப் படக்குழு அறிவித்தது. தற்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நேற்று (டிசம்பர் 16) சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

ஹர்பஜன் சிங் படப்பிடிப்புத் தளத்துக்கு வந்தவுடன், படக்குழுவினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்து அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இந்தப் படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x